தமிழகத்தில் பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ஒரு கிலோ பூண்டு 350 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையேற்றம் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.