பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
முசாபராபாத் பகுதியில் மின் கட்டணம் மற்றும் வருமான வரி கட்டணம் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையை கண்டித்து, அதிகாரிகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.