கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடிகை நயன்தாரா தனது கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா படப்பிடிப்பிற்காக தென் மாவட்டத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் தமது கணவருடன் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலையின் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து சுவாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதிக்கு சென்று, அங்கும் சாமி தரிசனம் செய்தார்.