விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
இது போன்ற சம்பவம் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஆய்வு தொடர்பான அறிக்கையை தினமும் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.