திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்படுகிறதா தமிழக அரசு? - அண்ணாமலை கேள்வி!
Sep 30, 2025, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்படுகிறதா தமிழக அரசு? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
May 14, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்படுகிறதா தமிழக அரசு? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மாதம் ஒரு முறை, தமிழக மக்களின் மீது ஏதோ ஒரு வகையில் கட்டண உயர்வைச் சுமத்தி வரும் திமுக அரசு, தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

மே 8, 2024 தேதியிட்ட அரசாணையின்படி, ரூ.5/- ஆக இருந்த கட்டணம், ரூ.500/- ஆகவும், ரூ.30 ஆக இருந்த கட்டணம், ரூ.1,000/- ஆகவும் என, 26 வகையான சேவைகளுக்கான பத்திரப் பதிவு கட்டண உயர்வைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்குப் பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு.

ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், வழிகாட்டி மதிப்பை சுமார் 50% வரை உயர்த்தி வசூலிக்கத் தொடங்கிய திமுக அரசின் செயல்பாடு சட்ட விரோதமானது என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், தீர்ப்பை மதிக்காமல், உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தையே வசூலித்து வந்தது.

இதனை எதிர்த்து, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்றும், இந்த ஆண்டு ஜனவரி 17 அன்றும், தமிழக பாஜக சார்பில் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தோம்.

இதனை அடுத்து, இந்த ஆண்டு மார்ச் 6 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டும், திமுக அரசு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவைக் கண்டு கொள்ளாமல் உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலான கட்டணத்தையே வசூலித்து வருகிறது.

தற்போது, பத்திரப்பதிவு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தியிருப்பதன் மூலம், சாதாரண பொதுமக்கள் மீதான கட்டணச் சுமையை பல மடங்கு அதிகமாக்கியுள்ளது.

தற்போது, வழிகாட்டி மதிப்பை மீண்டும் உயர்த்த, திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்படி, சில இடங்களில் 33% வழிகாட்டி மதிப்பு உயர்வும், சில இடங்களில் 50% உயர்வும், மேலும் சில இடங்களில் 100% வரை வழிகாட்டி மதிப்பை உயர்த்த, திமுக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி, வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தி, மாண்புமிகு உயர்நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் திமுக அரசு, இத்தனை அதிகமான கட்டணச் சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதன் பின்னணி, திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வருமானத்துக்குமானதாகத் தெரிகிறதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆட்சி நடத்துவது பொதுமக்களுக்காகவே அன்றி, திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தும் நிறுவனங்கள் லாபம் பார்க்கவும், அதில் கிடைக்கும் கமிஷன் மூலம், திமுகவினர் வருமானத்தைப் பெருக்குவதற்கும் அல்ல என்பதை திமுக அரசு உணர வேண்டும்.

முற்றிலும் அராஜகமான, அநியாயமான இந்த பத்திரப் பதிவு கட்டண உயர்வு அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தி, 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தி உள்ளார்.

Tags: Does the Tamil Nadu government work only for the real estate companies requested by the DMK? - Annamalai question!
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்கள் அமைப்பு!

Next Post

பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்! – அன்புமணி ராமதாஸ்

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies