வாரணாசியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-ஆவது முறையாக ஆட்சியமைப்பார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர்,
பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் இந்தியா சூப்பர் பவர் நாடாக மாறும் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், உலக அளவில் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.