என்டிஏ கூட்டணி வெல்வது காலத்தின் கட்டாயம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ததையொட்டி, அதற்கான நிகழ்ச்சியில் ஜி.கே. வாசன் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைப்பது அவசியம் என்று தெரிவித்தார்.