ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இருவேறு கண்மாய்க்குள் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாடானை அத்தானி கண்மாய்க்குள் மூழ்கி ரமேஷ் என்பவர் நிலைதடுமாறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார்.
தொடர்ந்து, நெல்வயல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்ற அசோக் என்ற நபரும் உள்ளே விழுந்து பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீச்சல் தெரியாமல் இரு நபர்கள் மூழ்கி இரு நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.