கோவை மாவட்டம் அன்னூரில் மழை காரணமாக பழமையான வேப்ப மரம் முறிந்து விழுந்ததால் பைபர் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, காரமடை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்தது.
இந்நிலையில் அன்னூர் அருகே 100 ஆண்டுகள் பழைமையான வேப்ப மரம் முறிந்து விழுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி மற்றும் பைபர் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.