கரூரில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கும் நிலத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோடங்கிப்பட்டி பகுதியில் விபீஷ்னன் மற்றும் சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறிய மர்ம கும்பல், நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்தனர்.
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.