திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கூறி திரையரங்கு ஊழியரை, போதை இளைஞர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள திரையரங்கில் இரவு காட்சிக்கு வந்த போதை இளைஞர்கள் சிலர், இடைவேளையின் போது கேண்டீனுக்கு சென்று சிப்ஸ் வாங்கியுள்ளனர்.
அப்போது சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், திரையரங்கு ஊழியரை தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த திரையரங்கு ஊழியர்களும், இளைஞர்களை பிடித்து நையப்புடைத்துள்ளனர். இந்நிலையில் மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.