கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் 5 பசுமாடுகளை தலை, கால்களை மடக்கி ஒன்றன் மீது ஒன்றாக லோடு ஆட்டோவில் ஏற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனை கண்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில், இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பசுமாடுகளை மீட்டு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.