மகாராஷ்டிராவில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, திண்டோரி, காட்கோபர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்கிறார்.
5-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. 5-ம் கட்ட தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 13 தொகுதிகள் உட்பட 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, மகாராஷ்டிராவில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, திண்டோரி, கல்யாண் மற்றும் காட்கோபரில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்கிறார்.
கல்யாண் தொகுதியில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார். பிரதமரின் வாகனப் பேரணியை ஒட்டி, மும்பையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.