செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாத ஓடி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
கல்பாக்கம் அருகே சென்னை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே பசுமாடு நிற்பதை கண்ட ஓட்டுநர் காரை நிறுத்த முற்பட்டபோது தாறுமாறாக ஓடிய கார் விபத்தில் சிக்கியது.
இதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.