சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட திருச்சி போலீஸார், கேமராக்கள், Hard disk- க்குகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.
யூ-டியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்களை இழிவாக பேசிய வீடியோவை ஒளிப்பரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் சோதனை மேற்கொண்ட போலீஸார், 4 கேமராக்கள், Hard disk-க்குகள் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றினர். இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன், தனது மகளுடன் கூட பேச விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தன் கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்காக மொத்த குடும்பத்தையும் தண்டிப்பது முறையல்ல என்றும் குற்றம் சாட்டினார்.