நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், சுத்திகரிப்பு செய்த நீரை, கடலில் வீணாக கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம், வலம்புரிவிளை குப்பை கிடங்கு அருகே, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, அந்த தண்ணீரை குழாய்கள் மூலம் கடலில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்திற்காக, மகாராஜாபுரம் பகுதியில் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கியபோது, திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.