காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்சியடைந்தனர்.
தமிழகத்தில் கோடை வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான செவிலிமேடு, பெரியார் நகர், வெள்ளை கேட், கோவிந்தவாடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.