சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஆலைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
மாரனேரியில் இயங்கி வரும் பட்டாசு ஆலை விதிகளை மீறியதாக, கடந்த மார்ச் மாதம் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறையினர், அந்த ஆலையில் 50 தொழிலாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, பட்டாசு ஆலைக்கு சீல் வைத்த வருவாய்த்துறையினர், பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.