சென்னை, புளியந்தோப்பு பகுதியில் 6 வயது சிறுவனை நாய்க்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கடித்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை அதன் உரிமையாளர் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார்.அப்போது அவ்வழியாக சென்ற 6 வயது சிறுவனை வளர்ப்பு நாய் கடித்து குதறியது.
இதையடுத்து படுகாயமடைந்த சிறுவனை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், நாயின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.