பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையின்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கை நாளைக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தது. இதனைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை 50 புதிய வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளதால் விசாரணைக்கு வாய்ப்பிலை என கூறி வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.