டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பண்டிட் பந்த் மார்க்கில் டெல்லி மாநில பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை சுமார் 4 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 3 தீயணைப்பு வண்டிகளில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.