முதல் நான்கு கட்ட மக்களவைத் தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை 4 கட்டங்கள் முடிவடைந்துள்ளன.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 23 மாநிலங்களில் உள்ள 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
எஞ்சியுள்ள 3 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முறையே வரும் 20, 25 மற்றும் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
இந்தியாவில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
இது சில நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமாகும்.
மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.