கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்து தானும் தற்கொலை செய்ய முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியை சேர்ந்தவர்கள் பெருமாள் – திலகவதி தம்பதியினர், கரூர் அரசு மருத்துவ மனையில் தூய்மை பணியாளராக திலகவதி வேலை செய்து வரும் நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குளித்தலை சுங்கச்சாவடி அருகே திலகவதியை, பெருமாள் அரிவாளால் தாக்கிவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்ட வாகன தணிக்கை காவலர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.