ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் வசந்த உற்சவ திருவிழா கோலாகமாக நடைபெற்றது.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ராமேஸ்வரம் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் விழா 7 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு வசந்த மாலை அணிவித்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து பல்லக்கில் வலம் வந்த சுவாமிகள், சேது மாதவர் தீர்த்த குளத்தில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.