தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலைச்சாலை அடிவாரத்தில் கேரளாவை சேந்த பெண் உட்பட மூன்று பேர் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சந்தேகப்படும்படி நின்ற காரை போலீசார் சோதனை செய்தபோது, 3 பேர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
காருக்குள், காலியான பூச்சி மருந்து மற்றும் குளிர்பான பாட்டில்கள் கிடந்ததால் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.