அம்பாசமுத்திரம் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
நெல்லை வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் வீட்டிலிருந்த ஆட்டை, சிறுத்தை ஒன்று கவ்விச் சென்று வேட்டையாடியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கூண்டமைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.