ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது.
புஞ்சை புளியம்பட்டி, ஆசனூர், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடை விடாது மழை பெய்து வருகிறது.
இதனால் கடம்பூர் – குன்றி பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. ஆனால், அப்பகுதி மக்கள் மூழ்கிய தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர். தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.