ரெட் பிக்ஸ் யூ – டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்து திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியை ஒளிபரப்பியதாக ரெட் பிக்ஸ் யூ-டியூபர் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், மனு மீதான விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.