அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழிவு நீர் வடிகால் ஓடையில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுதியில் சாலையோரத்தில் அமைந்துள்ள கழிவுநீர் ஓடையில் மாடு ஒன்று தவறி விழுந்தது.
அப்போது பசுமாட்டின் சத்தம் கேட்டு அப்பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி பசு மாட்டை மீட்டனர்.