குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.