பிரதமரான பின் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
குஜராத் முதல்வராக இருந்தபோது ஏராளமான முறை பத்திரிகையாளர்களை சந்தித்த தாங்கள், தற்போது அதற்கு நேரம் செலவிடாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கையில், தான் பத்திரிகையாளர்களை சந்திக்க ஒருபோதும் தயங்கியதில்லை என்றும், முன்பெல்லாம் பொதுமக்களைத் தொடர்பு கொள்ள ஊடகம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஏராளமான தகவல் தொடர்பு சாதனங்கள் இருப்பதாகக் கூறினார்.
மேலும், ஊடகத்தின் துணையின்றி பொதுமக்கள் கூட தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவர முடிகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.