49 மக்களவைத் தொகுதிகளுக்கான 5-வது கட்ட தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறவுள்ளது.
18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது
இதனையடுத்து வரும் 20-ம் தேதி 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில், 5-வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
5-வது கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில்,
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
5-வது கட்ட தேர்தல் களத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 695 பேர் போட்டியிடுகின்றனர்.