ஆம்பூரில் கிருத்துவ சபை சங்க அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டம் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள கிருத்துவ சபை சங்க அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஏசுதாசை தாக்கினர்.
இதனால் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.