கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மழைக்காக பாகுபலி யானை ஒதுங்கி நிற்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது உப்பு பள்ளம் என்ற பகுதிக்கு வந்த பாகுபலி யானை, மழையில் நனையாமல் இருக்க சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நின்றது.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.