தேனி மாவட்டம், சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனையடுத்து ஒரே நாளில் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 120.37 அடியாகவும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 46 அடியாகவும் அதிகரித்துள்ளது.