மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு அதற்கான அரசானையை வெளியிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதில் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில், 2024- 25ம் நிதி ஆண்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன் படி, தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பயன்பெறுவோரின் ஊதியம் இது வரை 294 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 319 ரூபாயக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இதற்னான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ஊதிய உயர்வுக்காக ஆயிரத்து 229 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த ஊதிய உயர்வுக்கான அரசாணையை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அரசு வெளியிட்டுள்ளது.