சென்னை, ராயபுரத்தில் மது போதையில், காவலரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம், ஆதம் தெருவில் உதவி ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை உதவிக் காவல் ஆய்வாளார் செந்தில் குமார் சோதனை செய்துகொண்டிருந்தார்.
அப்போது மூன்று பேரும் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடினர், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகிலன், விக்னேஷ், சரத்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.