உத்தரபிரதேச மாநிலத்தில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், “மாநிலத்தில் பசுவதைக் கூடங்கள் இருந்த இடத்தில், தற்போது வாகன உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்களும், மருத்துவப் பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.
பாஜக ஆட்சியில் பசுக்களைப் பாதுகாக்க கொட்டகைகள் கட்டப்பட்டதையும் அமித் ஷா அப்போது நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, கடந்த காலங்களில் பக்ரீத், ரம்ஜான் பண்டிகையின்போது மட்டுமே உத்தர பிரதேசத்தில் சீராக மின்சாரம் விநியோகிக்கப்பட்டது எனவும், பாஜக ஆட்சியில் 24 மணிநேரமும் மாநிலம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.