நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் நீ வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. உதகை மார்க்கெட்டில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல் மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. படகு இல்லம் பகுதியில் பெய்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக படகு சவாரி இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.