அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் நடைமுறை அமல்படுத்தப்பபடவுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மருத்துவமனைகள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர், உதவியாளர்கள் கடைநிலை ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மணி 1 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2-வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3-வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.