சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வைகாசி விசாக பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை அடுத்து நாள்தோறும் சூரிய மற்றும் சந்திர பிரவை வாகனத்திலும், நாக வாகனத்திலும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என்று கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.