மழை எச்சரிக்கையின் காரணமாக விருதுநகர் மாவட்டத்திலுள்ள சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் மழை பெய்யும் என்றும், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் வைகாசி மாத பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தடை விதிப்பதாகவும், கனமழை எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை வரும் 24-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.