நாகர்கோவில் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் அலி, அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நண்பரின் மகள் திருமணத்திற்காக நாகர்கோயில் சென்ற இவர், நண்பர்களுடன் உலக்கை அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.