ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான், ஆதிரெத்தினேஷ்வரர் ஆகியோர் வெள்ளி வாகனத்தில் வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.