மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மும்பை பாந்திரா- ஓர்லி கடல் பாலத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் லேசர் ஷோ நடத்தப்படுகிறது.
இரவில் கடலில் மின்னும் லேசர் காட்சி, காண்போரின் கண்ணைப் பறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மும்பையில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.