திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக உள்ளூர்வாசிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை கோயிலை ஒட்டியுள்ள சாலைகளில் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே,பக்தர்களின் வசதிக்காக பார்க்கிங் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.