புதுச்சேரியில் கட்டுமர மீன்பிடி மீனவர்கள் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் மற்றும் பலமான காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த கட்டுமர மீன்பிடி மீனவர்கள் 21, 22 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.