தஞ்சாவூரில் திடீரென பெய்த மழையில், உற்சாக குளியல்போட்ட இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கீரனூர் கிராமத்தில் திடீரென கனமழை பெய்தது. அப்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் இளைஞர் சோப்பு போட்டு குளிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.