எல்லையில் ஆக்கிரமிப்பா ? - ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்
Sep 20, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் ஆக்கிரமிப்பா ? – ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

Manikandan by Manikandan
Feb 3, 2026, 11:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது இந்தியா – சீனா எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதி வெளிவராத புத்தகம் குறித்த கட்டுரையை வைத்துக் கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல்காந்தி மேற்கோள் காட்டும் புத்தகத்தை மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதனை தாம் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்…

இதையடுத்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் விதிகளை மதித்து பேச வேண்டும் எனவும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, விதியை பின்பற்றாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் அவையை எப்படி நடத்த முடியும்? என ராகுல்காந்திக்கு கேள்வி எழுப்பினார். குடியரசு தலைவர் உரை குறித்து பேசாமல் வேறு எதையோ பேசி வருகிறீர்கள் எனவும் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப அவையை நடத்த முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.

பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ஆதாரமற்ற தகவல்களைப் பேசுவது ஆபத்தானது என தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும்போது, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல்காந்தி முயற்சிப்பதாகவம் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து சீனா, எல்லையின் பெயர், ராணுவ தளபதியின் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிடாமல் ராகுல்காந்தி பேசிய நிலையில் அதற்கு சபாநாயகர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது…

 

Tags: bjpchinarahulgandhiparlimentCongressAmitshaborder issuepakistan
Share
Tweet
SendShare
Previous Post

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

Next Post

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – மாநிலங்களவையில் அதிமுக எம்.பி குற்றச்சாட்டு

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies