ஈரோடு அருகே பண மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெருந்துறையை சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன், இவரது சொத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் என்பவர் தாம் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி, அறிமுகமாகியுள்ளார்.
மேலும், வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி, இளங்கோவனிடம் 27 லட்ச ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளங்கோவன் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்தியதில் ஐஏஎஸ் அதிகாரி போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட ஆனந்த் வைஷ்ணவ்-வை கைது செய்தனர்.